மதுரைத் திட்டம்

14 September, 2007

தமிழிலக்கியம் நீடுழீ வாழ..

Filed under: பொது

உங்களது வலைப்பதிவில் சினிமா,சாதி,மதம்,பார்ப்பனர்,தலித்,போலி,நிஜம் என்பன போன்றவற்றை பற்றியே எழுதி,எழுதி அலுத்துப் போய்விட்டதா..?

பிறர் வலைப்பதிவுகளுக்கு அலறி அடித்துக் கொண்டு சென்று சினிமா,சாதி,மதம்,பார்ப்பனர்,தலித்,போலி ,நிஜம் போன்றவைகளை சார்ந்த ஆக்கங்களை படித்து,படித்து அலுத்துப் போய்விட்டதா…?

ஒரு மாறுதலுக்கு அல்லது ஆஹா! தமிழ்ப்பணி செய்யலாமே என்றொரு ஏறி இறங்கக் கூடிய ஆர்வத்தை ஒரளவு வளர்த்துக் கொள்ள ஆசையா..

வலையிலேயே தட்டச்சு செய்து தமிழ்ப்பணியால் உளம் நிறைவடையலாம் அல்லது பிறர் செய்துள்ளவற்றில் பிழை கண்டு பிடிக்கலாம்.பிழையை திருத்தி நல்லுணர்வு அடையலாம்.

முதலில் செய்ய வேண்டியது

http://groups.yahoo.com/group/pmadurai/ என்ற சுட்டிக்குச் சென்று மதுரைத்திட்டம் மடற்குழுவில் உறுப்பினராகுங்கள்.

இரண்டாவதாக

வலையில் நேரடியாக தமிழ் நூல்களை தட்டச்சு அல்லது பிழை பார்க்க ஏதுவாக dp-pm ல் உறுப்பினராகுங்கள்.

http://www.projectmadurai.org.vt.edu/

அவ்வளவே.

கீழேயுள்ள செய்முறை படங்கள் dp-pm ல் படிப்படியாக செய்ய வேண்டியவைகளை காட்டுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

தினமும் 30 நிமிடங்கள் தமிழ் மொழிக்கென,வரவிருக்கும் நமது தலைமுறைகளுக்கென ஒதுக்கி உங்கள் தமிழ்த்தொண்டை ஆரம்பியுங்கள்.

வாழ்த்துகள். நன்றிகள்.






















Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham